Designed by Iniyas LTD
யாழில் மைத்திரி குறைதீர்ப்பு நிலையம் திறந்து வைப்பு!
யாழ் வந்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் உள்ள குறித்த நிலையத்தை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.
தொடர்புடைய பதிவு

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா. மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
