Designed by Iniyas LTD
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக மகசின் சிறையிலும் போராட்டம்..
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள 42 அரசியல் கைதிகள் நாளை முதல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அவர்களும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
இதேவேளை அரசியல் கைதிகளது விடுதலையை திட்டுமிட்டு இழுத்தடிக்கின்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் இன்றைய சந்திப்பில் பங்கெடுத்துள்ளதாக கைதிகளது குடும்பங்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொடர்புடைய பதிவு
அரசியல் கைதிகளது விடுதலையை தடுக்கும் வகையில் வழக்குகளை நீதிமன்றங்களிற்கு மாற்றம் செய்வதும் முன்னிலையாகாது இழுத்தடிப்பதுமே சட்டமாஅதிபர் திணைக்களத்தின் முதன்மையான செயற்பாடாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகள் அரசியல் கைதிகளது போராட்டத்தை சுமந்திரன் பின்னடைய வைத்துவிட்டாராவென்ற சந்தேகத்தை அவர்களிடையே தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.