Designed by Iniyas LTD
யாழில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகள் தொடர்பில் விசேட கூட்டம்..
யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புப் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் குறிப்பாக யாழில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு சட்விரோத மணல் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
கூட்டத்தில் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் , யாழ் பிராந்திய சுரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அரச அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.