தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிறப்புற அனுக்ஷ்டிப்பு

2009 ம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாள்வரை  கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் இன்று(18) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது

யுத்தத்திலே தாய்  தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில்  இழந்த யுவதி கேசவன் விஜிதா பொதுச்சுடரேற்ற ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டாலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் முயற்ச்சி காரணமாக  அனைத்து தரப்பும் இணைந்து ஓரிடத்தில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிறப்புற அனுஸ்ரிக்கப்பட்டது

பொதுச்சுடரினை வடமாகாண முதலமைச்சர் க வி விக்னேஸ்வரன் யுத்தத்தில் தனது தாய்  தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில்  இழந்த யுவதி கேசவன் விஜிதா அவர்களிடம் கையளிக்க யுவதி பொதுச்சுடரேற்ற ஏனையவர்களும் சமநேரத்தில்  சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்

நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மத தலைவர்கள் சிவில் சமுக அமைப்புக்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்காணவர்கள் கலந்துகொண்டனர்.

 

Comments
Loading...