தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுகயீனம் காரணமாக உயிரிழந்த முன்னாள் வழங்கல் பகுதி பொறுப்பாளர் அஜித்துக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

புதுக்குடியிருப்பில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வழங்கல் பகுதிப் பொறுப்பாளர் அஜித்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் வைத்து அன்னாரது உருவப் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்கண்டு நடராசா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் அஜித் கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் அன்னாரது நல்லடக்கம் நேற்று இடம்பெற்றது.


Comments
Loading...