தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமராவதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும்- பன்னீர்செல்வம்

அமராவதி அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.amaravathi

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளின் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...