Designed by Iniyas LTD
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல் நாளில், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
வரும் 27-ம் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்கு மறுநாள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற 30-ம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னர் வேட்பாளரை அறிவிப்பதாக, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.