தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் எம் ஏ சுமத்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமத்திரன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

குறித்த தகவலை  தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

அங்கு அவர் ஐக்கிய நாடுகளின் நிரந்ச்தர வதிவிட  பிரதிநிதி  நிக்கி ஹாலேயை சந்திக்க உள்ளார். அதோடு அமெரிக்க இராஜாங்க அதிகாரிகச்ளையும் சந்திக்க உள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய தினம் பிற்போடப்பட்ட இலங்கை தொடர்பான பூகோள காலகிரம அறிக்கையும் அது தொடர்பான விவாதமும் எதிர்வரும் 29ம் திகதி நடைபெற உள்ளது.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளுடன் எம் ஏ சுமத்திரன் கலந்துரையாடல்  நடத்த உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடகபிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...