Designed by Iniyas LTD
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டென்னஸி பிராந்தியத்தில் நிர்வாண மனிதர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்னஸி பிராந்தியத்தில் அமைந்துள்ள அன்டியோக் என்ற புறநகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தானியங்கி துப்பாக்கியொன்றினால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தாக்குதல்தாரியிடம் இருந்து ஆயுதத்தை பறிக்க முயன்ற ஒருவர் உட்பட 2 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த தாக்குதல்தாரி கடந்த வருடம் வெள்ளை மாளிகை அருகில் வைத்து பொலிஸாரல் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.