Designed by Iniyas LTD
அமெரிக்காவில் முஸ்லிம் எனக்கருதி இந்தியர் மீது தாக்குதல்!
அமெரிக்காவில் பிட்ஸ் பர்க் பகுதியில் சவுத்ஹில்ஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஆங்குர் மேத்தா. இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார்.
இவர் அங்குள்ள ரெட் ராபின் என்ற விடுதியில் உணவு சாப்பிட்டுக் கொண் டிருந்தார். அவர் அருகில் ஜெப்ரி ஆலென் பர்கீஸ் (54) என்ற அமெரிக்கர் அமர்ந்திருந்தார். இவர் பென்சில் வேனியா பேதல் பார்க் பகுதியை சேர்ந்தவர்.
அப்போது பர்கீஸ் தனது முழங்கையால் ஆங்குர் மேத்தாவின் தலையில் ஓங்கி அடித்தார். அதை அவர் தட்டிக்கேட்டார்.
அப்போது மேத்தாவை பார்த்து நீங்கள் என அருகில் அமர்ந்து இருப்பதை நான் விரும்பவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை 5 தடவை முகத்திலும், தலையிலும் தாக்கினார்.
மேத்தாவின் உடை, மற்றும் தோற்றத்தை வைத்து அவர் முஸ்லிம் என கருதி இன வெறி தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரில் பர்கீஸ் கைது செய்யப் பட்டார். இவர் மீது கோர்ட் டில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. அவர் மீதான தண்டனை நிரூபிக்கப் பட்டால் அவருக்கு அதிக பட்சமாக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது.
சமீப காலமாக அமெரிக் காவில் இனவெறி தாக்கு தல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி 22-ந்தேதி கன்சாசில் இந்தியர் சீனிவாஸ் குச்சி போத்லாவும், அலோக் மடகானியும் சுடப்பட்டனர். அதில் குச்சிபோத்லா மரணம் அடைந்தார்.
மார்ச் 3-ந்தேதி வாஷிங் டன் கென்ட் நகரில் சீக்கியர் ஒருவர் துப்பாக்கியால் சுடப் பட்டு காயம் அடைந்தார்.