Designed by Iniyas LTD
திருமலையிலும் டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி மலி!
தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார். திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முதலாம் தர மாணவியான 6 வயதுடைய உதயராஜன் அஞ்சனா என்ற சிறுமியே, இவ்வாறு பலியாகியுள்ளார். இச் சிறுமியின் உயிரிழப்புடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்குவினால் பலியானோர் தொகை, 15 பேராக உயர்ந்துள்ளது. திருகோணமலை பிரதேச சுகாதாரப் பிரிவில், 440 பேர், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.