தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்க தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் திடீர் மரணம்.

batti-protest-150314-600

அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிறீலங்கா ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அருமைலிங்கம் திடீரென மரணமானார்.

முன்னாள் ஈ.பி.டி.பி.உறுப்பினரும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிப்பவருமான அருமைலிங்கம், மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராகவும் சிறீலங்காஅரசுக்கு ஆதரவாகவும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

காலை உணவை முடித்துக் கொண்டு 8.30மணியளவில் தொடங்கிய இந்தப் போராட்டம், மதிய உணவு வேளைக்கு முன்னதாக- 12 மணி வரை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடு சென்ற அருமைலிங்கம் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் முன்னர், ஈபிடிபியினால் நடத்தப்பட்ட வானொலி பிரசாரங்களில் முக்கிய பங்கெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...