தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொள்ளுப்பிட்டியில் நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

nave

பயங்கரவாதத்தை தோற்கடித்து பெற்ற வெற்றியை மறுபக்கம் திருப்பும் நோக்கில் அமெரிக்கா உட்பட மேற்குலக ஏகாதிபத்தியவாதிகள்  ஜெனிவாவில் தீர்மானங்களைக் கொண்டு வருவதாக லக்மவ தியனியோ (இலங்கை தாயின் புதல்விகள்) என்ற அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் இந்த அழுத்தங்களுக்கு சிறீலங்கா அடிப்பணியவோ, தலைவணங்கவோ தயாரில்லை எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் இந்த அமைப்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று வட்டத்தில் இருந்து பேரணியாக சென்ற அமைப்பின் உறுப்பினர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, நவநீதம்பிள்ளைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் அவரது உருவப்படங்களை காலில் போட்டும் மிதித்துள்ளது.

Comments
Loading...