தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெ.தேர்தல் டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னணியில் உள்ளார்.Trumps-surge

கிட்டத்தட்ட அவரது போட்டி உறுதியாகி விட்டது. ஆனால் அவருக்கு பல மட்டத்திலும் எதிர்ப்பும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் குதித்து பின்னர் விலகி விட்ட லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டால் (இந்திய வம்சாவளி) அளித்த பேட்டி ஒன்றில் டிரம்பை கடுமையாக சாடினார். அப்போது அவர், ‘‘அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் டொனால்டு டிரம்ப் எழுச்சி பெற்று வருகிறார். ஆனால் இது கட்சியின் அமைப்புக்கு சாவுமணியாகத்தான் அமையும்.

இந்த போட்டி அதைத்தான் காட்டுகிறது’’ என கூறினார். மேலும், ‘‘வாக்காளர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் விரக்தி அடைந்துள்ளார்கள். சில இடங்களில் குடியரசு கட்சி, அந்த விரக்திக்கு தகுதியானதாக அமைந்துள்ளது. டொனால்டு டிரம்ப் விழித்துக்கொள்ள வேண்டும்’’ எனவும் கூறினார். அதே நேரத்தில், ‘‘ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்பா, ஹிலாரி கிளிண்டனா என்றால், நான் குடியரசு கட்சியின் வேட்பாளர் என்ற முறையில் டொனால்டு டிரம்பைத்தான் ஆதரிப்பேன்’’ எனவும் குறிப்பிட்டார்.

Comments
Loading...