Designed by Iniyas LTD
அமேசான் நிறுவனக் கிடங்கில் குழந்தையின் சடலம்….
அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனக் கிடங்கில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கபட்டுள்ளது.
அமெரிக்கா பீனிக்ஸ் நகரில் அமேசான் நிறுவனத்திற்கு நான்கு கிடங்குகள் உள்ளன.
இந்நிலையில் கிரேட்டர் பீனிக்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அங்கு பெண்களுக்கான கழிவறை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை அமேசான் ஊழியருடையதா அல்லது வெளியில் இருந்து சென்ற எவரேனும் குழந்தையை அங்கு போட்டுச் சென்றார்களா என விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
