தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமைச்சர் மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கம்?

mahinda-amaraweera-720x450-2-450x281கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். காணிகளை திருப்பி கையளிப்பதில் நியாயம் பேணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்மாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு மூன்று மீன் வளத்துறை அமைச்சர்கள் பதவி வகிப்பதால் பிரச்சிணைகள் தலைத்தூக்கியுள்ளதாக பலர் என்னிடம் முறைப்பாடு தெரிவித்தனர்.

இது தொடர்பில் கவனம் செழுத்திய நான் கடற்றொழில் நீரியல் வள அமைச்சராக பதவி வகிக்கும் மஹிந்த அமரவீரவை அப்பதவியிலிருந்து நீக்கி அவருக்கு அபிருத்தியை முன்னெடுப்பதற்கு முக்கிய பதவியொன்றினை வழங்கப்படவுள்ளதுடன் விசேட அமைச்சு பதவியொன்றும் விரைவில் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு பலர் தமது காணிகளை கேட்டு அரசியல் ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். காணிகளை திரும்ப வழங்குவதில் அரசியல் கட்சி பேதம் பார்க்கப்படமாட்டாது. நியாயத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் தலைவணங்கியே மக்களுக்கு காணிகள் மீள கையளிக்கப்படும்

இன்றைய ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நற்பலன்களை எதிர்காலத்தில் புரிந்து கொள்ளலாம். அரசை எவ்;வாறாயினும் கவிழ்க்க முடியாது என்றார்.

Comments
Loading...