Designed by Iniyas LTD
ரணில்-மைத்திரி மீண்டும் திடீர் சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனரெனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, இவர்கள் இருவருக்குமிடையில் அடுத்தவாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்ப்பது தொடர்பாக, ஜனாதிபதி – பிரதமர் ஆகியோருக்கு இடையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.