Designed by Iniyas LTD
அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப ரணில் கோரிக்கை…
நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்,
மேலும் ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
தாம் அரசமைப்புக்குற்பட்டே செயற்படுவதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளிற்காகவே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த டளஸ் அழகப்பெரும தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும், ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை என கூறியுள்ளார்,
ஆனால், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் ஒத்துழைப்பு வேண்டும் என கோரியிருப்பது தேசத்துரோகம் என டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.