தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் வல்வெட்டித்துறையில் மாவீரர் நிகழ்வு ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்திய பொலிஸார்..

கடந்த ஆண்டு தீருவில் வெளியில்  மாவீர்ர் நாளை முன்னின்று நடத்திய ஏற்ப்பாட்டாளர்களை  வல்வெட்டித்துறைப் பொலிஸார் அழைத்து மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

நேற்றைய தினம்  தொலைபேசி மூலமாக  விசாரணைக்காக வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கமைய பொலிஸ் நிலையத்திற்கு சென்றவர்களை நிலைய பொறுப்பதிகாரி கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை நீங்கள் தானே முன்னெடுத்தீர்கள், இவ் வருடம் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் தண்டணை வழங்கவேண்டிவரும் என அச்சுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதோடு  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரையும் பொலிஸார்  அழைத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை  பொலிஸாரின் குறித்த நடவடிகைக்கு வல்வெட்டித்துறை  மக்கள்  விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...