தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்பாறையில் ஏழு தமிழ் கிராமங்கள் அழியும் நிலை!

Batticaloa-11நாட்டில் கடந்த மூன்று தசாப்த கால­மாக நடை­பெற்ற யுத்­தத்தைக் காரணம் காட்டி கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளினால் அம்­பாறை மாவட்­டத்தில் திட்­ட­மிட்டு தமி­ழர்­களின் பதி­னொரு பூர்­வீகக் கிரா­மங்கள் பறிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இன்னும் ஏழு தமிழ்க் கிரா­மங்கள் அழிக்­கப்­படும் அச்­சு­றுத்­த­லுக்கும் உள்­ளா­கி­யுள்­ளன என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அரி­ய­நா­யகம் கவீந்­திரன் (கோடீஸ்­வரன்) தெரி­வித்தார்.

திருக்­கோவில் பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற அர­சாங்க ஓய்­வூ­தியச் சங்­கத்தின் வரு­டாந்தப் பொதுக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில், அம்­பாறை மாவட்­டத்தைப் பொறுத்த வரையில் பாண்­டிச்­சேரி, கோவா போன்ற இடங்­களில் காணப்­ப­டு­கின்ற ஒரு நிலத் தொடர்­பற்ற சமஷ்டி முறை­யி­லான ஆட்­சியை நாம் வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது.

எமது மக்­களின் பூர்­வீகக் கிரா­மங்­க­ளையும் எமது மண்­ணையும் பாது­காப்­பதன் மூல­மாக அழிந்து போயுள்ள தமி­ழர்­களின் கல்வி, கலை, கலா­சாரம் மற்றும் பொரு­ளா­தாரம் போன்­ற­வற்றை தொடர்ந்து பாது­காத்­துக்­கொண்டு நிம்­ம­தி­யாக வாழ­மு­டியும். அம்­பாறை மாவட்­டத்தில் தமி­ழர்­களின் நிலங்கள் தொடர்ந்து பறி­போய்க்­கொண்டு இருக்­கு­மானால், தமி­ழர்கள் அம்­பாறை மாவட்­டத்தில் வாழ்ந்­தார்­களா? என்ற பூர்­வீகம் இல்­லாது போய்­விடும்.

இதற்கு நாம் உடந்­தை­யாக இருக்கக் கூடாது. இதனைத் தடுப்­ப­தற்கு அம்­பாறை மாவட்ட தமி­ழர்கள் ஒவ்­வொ­ரு­வரும் சிந்­தித்து செயற்­ப­ட­வேண்­டிய கால­கட்­டத்தில் இருக்­கின்றோம்.

இதனை சரி­யான சந்­தர்ப்­பத்தில் சரி­யாக சிந்­தித்து குறித்த நேரத்தில் செயற்­ப­டாது போனால், எமக்­கான சிறந்த தீர்வை வெற்றி கொள்ள முடி­யாது போய்­விடும்.

இதனால் தமி­ழர்கள் தொடர்ந்து ஒடுக்­கப்­பட்டு அடக்கு முறை­யி­லான வாழ்க்கையை அனு­ப­விக்கும் நிலை­மைகள் தோன்­றலாம்.

இதே­வேளை ஒட்­டு­மொத்த தமி­ழர்கள் மிக நீண்ட கால­மாக தேடி நிற்கும் அர­சியல் தீர்­வுத்­திட்டம் மிக விரைவில் எட்­டப்­ப­டக்­கூ­டிய சந்­தர்ப்பம் காணப்­ப­டு­கின்­றது.

இந்தச் சந்­தர்ப்­பத்தை நாம் சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும். இது எமக்கு கிடைத்­தி­ருக்­கின்ற கடைசிச் சந்­தர்ப்­ப­மாகும்.

இச்­சந்­தர்ப்­பத்­தினை புத்­தி­சா­து­ரி­ய­மாக நாம் பயன்­ப­டுத்தும் நிலையில் இந்த வருடம் அல்­லது அடுத்த வரு­டத்­திற்குள் எமக்­கான விடிவை பெற்றுக் கொள்ள முடியும். இந்த தீர்வு திட்­டத்­தினை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைத்­ததன் அடிப்­ப­டையில் தனது தீர்வு திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. அதன்படி ஐக்கிய இலங்கைக்குள் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கு இணைந்த நிலத் தொடர்பிலான ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அல்லது நிலத் தொடர்பு அற்ற சமஷ்டி முறையிலான ஆட்சி முறையையே நாம் கோரி நிற்கின்றோம் என்றார்.

Comments
Loading...