தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்பாறையில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

அம்பாறை, வாங்காமம் மலையடிக் குளத்தில் நீராடிய  ஏறாவூரைச் சேர்ந்த செய்னுலாப்தீன் முஸ்தாக் அஹமட் (வயது 16) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மே தின விடுமுறையில் திங்கட்கிழமை (1)  தனது நண்பர்களுடன் சுற்றுலாச் சென்ற இச்சிறுவன், குளத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இச்சிறுவனைக் காப்பாற்றுவதற்கு நண்பர்கள் முயற்சித்த போதும்,  அது கை கூடவில்லை. குளத்தில் நீராடிய இவர்களில் எவருக்கும் முறையாக நீச்சல் தெரிந்திருக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர். ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் 11ஆம் ஆண்டில் இம்மாணவன் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...