தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசாங்கத்திற்குள் குழப்பம்- விலகுகின்றார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்த சில வாரங்களில் அரசதரப்பிலிருந்து விலகி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்கட்சியினர் பகுதியில் அமர்ந்து சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசாங்கத்திற்குள் மோதல்தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகநியமிக்கப்பட்டமை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறித்து அதிருப்தியும் எதிர்ப்பும் அரசாங்கத்திற்குள் காணப்படுகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட பல விடயங்கள் காரணமாக அரசாங்கத்திற்குள் விரிசல்கள் தீவிரமடைந்துள்ளன.
பொதுஜனபெரமுனவிற்குள் பிளவு ஏற்படுவதை தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
Loading...