தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிய துண்டு பாணும் வாழைப்பழமும் தந்தனர்- சரத்வீரசேகர பொய்சொல்கின்றார்- ஜோசப் ஸ்டாலின்

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு பொய் சொல்கின்றார், மக்களை தவறாக வழிநடத்துகின்றார் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நியுஸ்ஹப் இணையத்தளம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் வாகனத்திற்குள் இழுத்து ஏற்றப்பட்டனர், அவர்களது ஆடைகள் பறிக்கப்பட்டன,சிலாபம் பொலிஸ் நிலையத்தில சிறியதுண்டு பாணும் வாழைப்பழமும் மாத்திரம் வழங்கினார்கள் என ஜோசப் ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார்.
மாற்றுடைகள் இல்லாததால் பெட்சீட்டை நாங்கள் பயன்படுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் மருந்துகளை வழங்கினார்கள் என அமைச்சர் பொய்சொல்கின்றார்- 1500 ரூபாய் என்பதால் இன்ஹேலரை கூட வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட ஜோசப்ஸ்டாலினும் ஏனையவர்களையும் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ள போதிலும் பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
Comments
Loading...