Designed by Iniyas LTD
அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரியில் இருந்து சம்பள உயர்வு….
அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இந்த மாதம் முதல் 2500 ரூபாவுக்கும் 10000 ரூபாவுக்கும் இடையில் அதிகரிக்க உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவையில் கீழ்மட்ட ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 10000 ரூபாயிலும் அதிகரிக்க உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், அந்த கொடுப்பனவு 2016ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பகுதி பகுதியாக அடிப்படை சம்பளத்துடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய மற்றுமொரு கட்டமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரி மாதத்தில் இருந்து 2500 ரூபாய் – 10000 ரூபாயிலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குரிப்பிடத்தக்கது.