தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியலமைப்பு வரைவு மற்றும் தேசிய சொத்துக்களின் விற்பனை ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய குற்றம்…

அரசியலமைப்பு வரைவு மற்றும் தேசிய சொத்துக்களின் விற்பனை ஆகியன ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய குற்றங்கள் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  இதனை  குறிப்பிட்டுள்ளார்

முன்னைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை மைத்திரி- மகிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

.மேற்கத்திய நாடுகளின் உத்தரவுக்கமைய எழுதப்பட்ட அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் நாடு பிளவுபடும்  அதேவேளை , வெளிநாட்டுச் சக்திகள் எமது இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை இனிச் செயற்படுத்த முடியாதென மேற்குலக நாடுகள்,  கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தமது கவலையை வெளியிட்டுள்ளதாகவும்,

இதன் காரணமாக உள்நாட்டு விவகாரங்களில்  அவை தலையீடு செய்ய எத்தனிக்கின்றதாகவும் தேரர் கூறியுள்ளார்..

அதோடு வெளிநாடுகள் இலங்கையின் இறைமையை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், . உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ய வெளிநாடுகளுக்கு இலங்கைத் தலைவர்கள் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அம்பாந்தோட்டைத் துறைமுகம்  உட்பட  விற்கப்பட்ட எமது சொத்துக்களை புதிய அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேரர் கூறியுள்ளார்.

இதேவேளை,  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  குணதாச அமரசேகர சீனத் தூதுவர் மாத்திரமே முறைப்படி செயற்பட்டாரென  பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...