Designed by Iniyas LTD
அரசியல் கட்சிகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வர முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் உட்பட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரசியல் கட்சிகளுக்கு வருமானவரி சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் அவற்றை கொண்டு வரவேண்டும் என கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளதாக வாதிட்டார்.
இதற்கு மத்திய அரசின் தரப்பில் பதிலளிக்கையில், எதிரணிகள், போட்டி கட்சிகள், பிற கட்சிகளின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், இதனால் கட்சிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் வாதிடப்பட்டது.
எனவே அரசியல் கட்சிகளை ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.