தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவழித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

அரசியல் கைதிகளை விடுதலை  செய்ய வேண்டியும் அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவழித்து இன்று  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் கிராம அமைப்புகள் விளையாட்டு கழகங்கள் வர்த்தகர்கள் கலைஞர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருக்கின்றார்கள்..
நீண்ட காலமாக எதுவித விசாரணைகளுமின்றி சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்க கோரி உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் விடுதலைக்காகவும் அவர்களுக்கு ஆதரவழித்தும் மாபெரும் கண்டனப்பேரனி ஒன்றினை ஏற்பாடு செய்து இன்று நடத்திக்கொண்டிருப்பதாக  வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...