Designed by Iniyas LTD
தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் சிலரே வடக்கில் வாள்வெட்டுச் செயல்களில் ஈடுபடுகின்றனர்…
வெளிநாட்டுக்குச் சென்ற தமது சகோதரர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டு தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் சிலரே வடக்கில் வாள்வெட்டுச் செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது வடக்கில் செயற்படும் ஆவா குழுவினர் மாலை வேளைகளில் மது அருந்தி விட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இணுவில் மற்றும் , கோப்பாய் பகுதிகளிலேயே அதிக வாளவெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
மேலும் உள் மோதல்களை அடுத்துப் பலரும் வெளியேறுவதால் ஆவா குழு படிப்படியாக சிதைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.