தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சருடன் கூட்டமைப்பு சந்திப்பு!

IMG_0373-615x410-450x300கொழும்பு 08  ஆம் இலக்க நீதிமன்றத்தில் இடம்பெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38 பேரின் வழக்குகள் ஹோமாகம  நீதிமன்றிக்கு மாற்றப்படுவதை  தடுப்பது குறித்து நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவும் கலந்துரையாடுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்,   எம்.ஏ. சுமந்திரன்   தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்வதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு  சிறப்பு நீதிமன்றத்தில் இடம்பெறும்  தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை ஹோமாகம  நீதிமன்றிக்கு மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கைதிகளின்  வழக்குகளை  தாமதப்படுத்தவே  இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  நேற்று  குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையிலே, அரசியல் கைதிகளின் வழக்குகள் ஹோமாகம  நீதிமன்றிக்கு மாற்றப்படுவதை  தடுப்பது தொடர்பில்   நீதி அமைச்சர் விஜயதாஸ  ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன்   தெரிவித்துள்ளார்.

Comments
Loading...