Designed by Iniyas LTD
இலங்கை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு! இருவர் பலி
அளுத்கடை நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவரும், துப்பாக்கிதாரி மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில், துப்பாகிதாரியும் பலியாகியுள்ளனர்.
இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 48வயதான நபரொருவர் பலியாகியுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி தப்பியோடிவேளை, பிரதேசவாசிகள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தாக்கியுள்ளனர்.
தாம், சுற்றிவளைத்து பிடித்த துப்பாக்கிதாரி மீது பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் காயமடைந்து, பின்னர் மரணித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.