Designed by Iniyas LTD
அரசியல் கைதிகளின் விடயம் திருவிழா அல்ல – ஆனந்த சங்கரி..
அரசியல்கைதிகள் விடயம் காளி கோவில் திருவிழா அல்லவென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
மேலும் கொழும்பில் சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்கள் தொடர்பில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும்,
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை நேரில்தான் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய பதிவு
அதோடு குறித்த கைதிகள் மிக நீண்ட காலமாக சிறையில் வாழ்கின்ற நிலையில், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் சட்டம் தொடர்பில் அதிகம் அறிந்துள்ளதாகவும்,
கைதிகளாக உள்ளவர்கள் நீண்ட காலமாக இருந்தால் அவர்கள் ஒருவாரம் வீடு சென்று திரும்புவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாகவும் கைதிகள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சுமந்திரன், சம்பந்தன், பிரதம அமைச்சர், நீதி அமைச்சர் என பலர் கூடி பேசினர். எனினும் அங்கு தீர்மானம் எடுக்க முடியாது போயுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்க கூடிய முக்கியத்தர்கள் இருந்தனர் எனினும் கைதிகள் விடயத்தில் . ஏன் அவர்களால் தீர்மானம் எடுக்க முடியவில்லை என்றும் ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பிறிதொரு திகதியிடப்பட்டு நாள் குறித்து செய்வதற்கு இது ஒன்றும் விழாவோ அல்லது . திருமண சடங்குகளோ அல்ல எனவும், அப்பாவிகளின் உயிரோடு சம்மந்தப்பட்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.