தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் …

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்  அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் உள்ளிட்ட நடைப் பயணப் போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று  யாழில் உள்ள ஐ.நா.வின்  அலுவலகத்திற்கு   சென்று மகஜரைக் கையளித்துள்ளனர்

இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும்,

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை நடைப்பயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை என்றும்,.

இதன் காரணமாக இன்றைய தினம்  யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...