தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் …

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல்  எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர், இராணுவ மற்றும் கடற்படை பிரதானி உள்ளிட்டவர்களுடன், அரசதுறைசார் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

இதேவேளை  யாழில்  தற்போது பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 16ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில்  நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும்  பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில்  பலாலி விமான நிலைய ஓடுபாதைக்கு அருகாமையிலுள்ள பொதுமக்களின் காணிகள்  ஒருபகுதி விடுவிக்கப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஜே 238 கிராம சேவையாளர் பிரிவு கட்டுவன் காசிஅம்மன் கோயிலிற்கு அருகிலுள்ள காணிகள் தொடர்பில், உரிமையாளர்கள் அடுத்த வாரத்துக்குள் தங்கள் காணிப்பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...