தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் விடுதலையில் ஒரு போதும் நான் தடையாக இருந்ததில்லை -ரணில்

தமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்ததாகவும்,

அதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்றும் முன்னாள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் கைதிகளில்  சிலரை விடுவிப்பதில், ஜனாதிபதிக்கு   உடன்பாடு இருக்கவில்லை என்றும் மாறாக, நீதிக்கு உட்பட்டு, அவர்களைக் கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்

சட்டவிரோதமானதும் நெறிமுறையற்ற வகையிலும் செயற்பட்டு,இலங்கையின்  அரசமைப்பை நெருக்கடிக்குள் தள்ள, ஒருபோதும் இடமளிக்கப்போவது  இலையெனவும், , நாடாளுமன்ற அதிகாரங்களை, சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும்  அவர் வலியுறுத்தி உள்ளார்

இந்தியாவின் றோ உளவுப் பிரிவு, ஜனாதிபதியைப் படுகொலை செய்ய முயற்சித்ததாகத் தெரிவிக்கும் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசியதிலிருந்தே புலனாகின்றதென்றும், ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பை மேற்கொள்ள வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே கோரிக்கை முன்வைத்துள்ளதென்றும் ஏனைய கட்சிகள், இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும்  ரணில் தெரிவித்துள்ளார்.

மேலும்  புதிய அரசமைப்புக்கான பரிந்துரைகளில், கூட்டமைப்பினரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் இந்த அதிகாரங்கள், அளவானதாகவும் பிரச்சினைகள் ஏற்படாத வகையிலும் பகிரப்படும் பட்சத்திலேயே,

சமத்துவமானதும் சமாதானமானதுமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்றும்  இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...