தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர் மறுப்பு…

மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு முன்னாள் அமைச்சர்
மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கட்சித்தாவல்கள் அதிகமாக இடம்பெறும் இந்த  சந்தர்ப்பத்தில் மனோ – மைத்திரி சந்திப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சந்திப்பு குறித்து  மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் , ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்கள்  அவரை சந்திக்க சென்றிருந்ததாகவும், அதன்போது , புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் அழைப்பை நிராகரிப்பதாக ஜனாதிபதியிடம் கூறியதாக  மனோ கணேசன் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...