Designed by Iniyas LTD
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் கையெழுத்துக்களுடனான மகஜர்…
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுடனான மகஜர், இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியை சந்திப்பதற்கு முயன்றபோதும், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், இன்று காலை கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்தில் முடிவடைந்தது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், அவர்களது விடுதலை என்பது இழுபறியாகவே உள்ள நிலையில், ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டு அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.