Designed by Iniyas LTD
சிறி. மரைன் படைப்பிரிவுக்கு அமெ. மரைன் படைப்பிரிவினரால் பயிற்சி
இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க கடற்படை மரைன் படைப்பிரிவினரால் பயிற்சியளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி இன்று தொடக்கம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை திருகோணமலையில் இடம்பெறவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ் சோமசெற் என்ற ஈரூடக போக்குவரத்துக் கப்பல் அமெரிக்க கடற்படையின் 11ஆவது மரைன் நடவடிக்கை அணியுடன் திருகோணமலை துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுடன் இணைந்து அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினரும், கடற்படை மாலுமிகளும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம், அடிப்படை தற்காப்பு தந்திரங்கள், போரில் உயிர் காப்புப் பயிற்சிகள், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல், விமானங்களுக்கு பயிற்றுவித்தல், சிறிய படகு மற்றும் தொடரணி நடவடிக்கைகள், தலைமைத்துவ பயிற்சி வகுப்புகளை இது உள்ளடக்கியதாகும்.