தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை யாழில் போராட்டம்…

அரசியல் கைதிகளைக் குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின்  நியாயமான கோரிக்கையை அரசாங்கம்  உடனடியாக நிறைவேற்றவேண்டும் என  வலியுறுத்தி நாளை யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த போராட்டத்தில் அனைவரும் லந்துகொள்ளுமாறு   அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்    அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த  கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...