Designed by Iniyas LTD
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்..
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு இலங்கை இராணுவம்,உட்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் பொலிஸ் உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் இருந்ததாக ஜெனீவாவில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த அறிக்கை மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால்அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில்,
தடுப்புகாவலில்வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் இத்தகவல் அம்பலப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த அறிக்கை இலங்கையில் இருஎது தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களைமையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.