Designed by Iniyas LTD
அரசியல் நிலையற்ற தன்மையால் பிற்போடப்படவுள்ள பலாலி விமான நிலைய கட்டுமானப்பணிகள்..
இலங்கை அரசியலில் நிலையற்றத்தன்மை காரணமாக பலாலி விமான நிலைய கட்டுமானப்பணிகளை பிற்போடப்பவுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
இதனை யாழிலுள்ள இந்திய துணைதூதரக வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த ஆண்டின் இறுதியில் முதலாவது சர்வதேச விமான சேவையினை தமிழகத்தின் விமான தளமொன்றிலிருந்து ஆரம்பிக்க இந்திய முற்பட்டிருந்தது.
தொடர்புடைய பதிவு
ரணிலுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது இந்திய தூதரிற்கு அதற்கான உறுதி மொழி வழங்கப்பட்டுமிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது.
எனினும் பலாலி விமான நிலையப் பணிகளை ஆரம்பிப்பதில் கொழும்பு அரசியல் குழப்பம் தடையேற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையில் இந்தியா பலாலி விமான தள கட்டுமான பணிகளை பிற்போட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
