தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் ரீதியாக பழிவாங்கும் அளவிற்கு தான் பலமற்றவர் அல்ல – மஹிந்த

அரசியல் ரீதியாக பழிவாங்கும் அளவிற்கு தான் பலமற்றவர் அல்ல என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திங்க கட்சி தமது கட்சி எனவும், இந்தக் கட்சியில் இருந்த பலர் வெளியே சென்றார்கள் ஆனால் தாம் வெளியில் செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.mahinda_rajapaksa

அத்துடன், 2005 ஆம் ஆண்டு நாட்டின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் மக்கள் தன்னிடம் கேட்ட ஒரே விடயம் யுத்தத்தை நிறைவு செய்து தாருங்கள் என்பதே என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறுவது போல தனது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தை நிறைவு செய்திருந்தால், ஏன் தன்னிடம் மக்கள் இவ்வாறான வேண்டுகோளை முன்வைத்தார்கள் என, இதன்போது அவர் கேள்வி எழுப்பினார். இதேவேளை, அப்பம் சாப்பிட்டுவிட்டு இரவோடு இரவாக தாவியவர்கள், ஏதோ மஹிந்தவின் ரகசியங்களை வெளியிடப்போவதாக கூச்சலிடுகிறார்கள்.

அவ்வாறானவர்கள் பற்றிய நிறைய ரகசியங்கள் தன்னிடமும் இருக்கிறது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஆனால் ஒருவர் கூறியதை திரும்பக்கூறும் பழக்கம் தன்னிடம் இல்லாததால், ரகசியங்கள் பற்றி பேசப்போவதில்லை என கூறியுள்ளார்.

Comments
Loading...