தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரச படைகளுக்கும் காவற்துறையினருக்கும் எதிராக யாழ் ஊடகவியலாளர் முறைப்பாடு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் சிறிலங்கா படையினரதும் காவல்துறையினரதும் அடாவடித்தனங்களுக்கு எதிராக ஓமந்தை காவல்நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.

தாங்கள் பயணித்த ஹையேஸ் வாகனத்தில் சிறிலங்கா படையினரே கஞ்சா போதைப் பொருளை வைத்ததாகவும் அதை தாங்கள் கண்ணால் கண்டதாகவும் தெரிவித்த ஊடகவியலாளர்கள் இதனால் குறித்த சிறிலங்கா படையினரை விசாரணைக்கு உட்படுத்துமாறும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.journalist-omanthai-260714-seithy (4)

மேலும், குறித்த சம்பவத்தின்போது தங்களைக் கைது செய்த காவல்துறையினன் தங்களை தாக்க முற்பட்டதாகவும் தமது அடையாள அட்டை, கையடக்கத் தொலைபேசி போன்றவற்றைப் பறித்தெடுத்தாகவும் இதன்போது தங்களைத் தகாத வார்த்தைகளால் ஏசியதாகவும் ஊடகவியலாளர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயற்பாடு குறித்து உரிய காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளுமாறும் அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்ய முற்பட்டபோது காவல்துறையினர் அதை ஏற்க மறுத்தனர். ஆனால், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தாங்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் செய்த பின்னரே தங்கள் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

Comments
Loading...