Designed by Iniyas LTD
இந்தியா மனித கடத்தல் தளமாக டாப் லிஸ்ட்டில் நம்பர் ஒன்னாக இருக்கிறது
மனிதர்கள் கடத்தல் செய்யப்படுவதில் தெற்காசியா அளவிலான பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக நேபாள், வங்கதேசத்தில் இருந்து கடத்தி இந்தியாவில் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது.
தெற்காசியாவுக்கான டிரக்ஸ், குற்றம் அலுவலக ஐ.நா., பிரதிநிதி கிறிஸ்டினா அல்பர்டின் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் , இந்தியா மனித கடத்தல் தளமாக டாப் லிஸ்ட்டில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. நேபாளம், வங்கதேசம், வளைகுடா நாடுகளில் இருந்து பலரும் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு எத்தனை பேர் என்பது துல்லியமாக சொல்ல இன்னும் சில ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. கடத்தப்படுபவர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு தங்களின் தாய்நாடு செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர்.
வங்க மொழி பேசும் வங்தேச பெண்கள் 100 க்கணக்கில் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வாரு ஆண்டும், தெற்காசிய அளவில் சர்வதேச எல்லை பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இவ்வாறு கடத்தப்படுகின்றனர். இதில் குறிப்பாக 75 சதவீதம் பெண்களே. கடத்தப்பட்டு விற்கப்படுபவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலாளர்களாகக்கும் நோக்கில் விற்கப்படுகின்றனர். தெற்காசிய நாடுகளில் கிராமப்புற பகுதியினரே இது போன்ற இலக்குக்கு ஆளாகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கண்டங்கள் இடையே ஒப்பீடு தொடர்பாக பதில் அளித்த போது தெற்காசியாவே உலக மக்கள் தொகையில் 6ல் 1 பங்கு இங்கே வசிக்கின்றனர். எனவே இது போன்ற சம்பவம் லிஸ்டின் டாப்பில் வருகிறது. நேபாள், வங்கதேசம் கவனத்திற்கும் இதனை நாங்கள் எடுத்து காட்டியுள்ளோம்.
தொண்டு நிறுவனங்கள் : இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெரும் உதவியாக இருக்கிறது. இவர்களுக்கு தங்கும் புகலிடம் கொடுத்து பராமரித்து கொள்வது மிக பாராட்டுக்குரியதாகும். இந்த நிறுவனங்கள் இந்த பணியை நன்றாக செய்கிறது. மீட்கப்பட்டவர்களை அந்தந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் முறையான நடவடிக்கைகள் என்பது மிக சொற்பமாகவே உள்ளது. இது இன்னும் முழு வீச்சில் வேகப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அல்பர்டின் கூறினார்.