Designed by Iniyas LTD
அல்கொய்தா அமைப்பினர் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர் – மோடி
இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என பிரதமர் நரேந்திரமோடி பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது, அல்கொய்தா அமைப்பினர் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அல்கொய்தா தாளத்துக்கு, இந்திய இஸ்லாமியர்கள் ஆடுவார்கள் என யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் மாயையில் உள்ளனர் என்று அர்த்தம்.
ஏனெனில் இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவுக்காகவே மட்டும் வாழ்ந்து செத்து மடிவார்கள் என்றும் அவர்களின் தேசப்பற்று சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது எனவும் பேசியுள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=YUhsUWVweyk” width=”560″ height=”315″]