தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவசரமாக புதிய அரசியல் அமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையில்லை – சிறிவிமல தேரர்

அவசரமாக புதிய அரசியல் அமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையில்லை என கெட்டம்பே ரஜோபவனாராயமயதிபதி கெப்படியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்புதிய அரசியல் சாசனம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் மேலும்….therar

தற்போது நாட்டில் அமுலில் உள்ள அரசியல் அமைப்பு போதுமானதாகும்.தேவை என்றால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தங்களை செய்ய முடியும்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைக்கிடை வெளியிட்டு வரும் கருத்துக்களினால் மக்களின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

வற் வரி, சுற்றாடல் பாதிப்பு, படைவீரர்கள் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்படல், ஊனமுற்ற படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை போன்றவற்றை உதாரணமாக கூற முடியும்தற்போதைய அரச தலைவர்கள் ஊடகங்களை விமர்சனம் செய்கின்றனர், ஊடகங்கள் பிழையாக செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும், இந்த ஊடகங்களே தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிப் பீடம் ஏற்றியதுநல்லிணக்கம் என்பது சிங்கள பௌத்த கொள்கைகளை அடிமைப்படுத்திக் கொள்வது கிடையாதுவடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த உரிமைகளுக்கு சவால் விடுக்கப்படுகின்றனநல்லிணக்கம் என்ற போர்வையில் இவற்றைக் தாங்கிக்கொள்ள நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...