தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய அரசியல் கட்சியில் அங்கத்துவகித்தால் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை ரத்தாகும் – துமிந்த

புதிய அரசியல் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டால் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை ரத்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.duminda_disanayake-380-seithy

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டால் அவ்வாறானவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் ரத்தாகும். சுதந்திரக் கட்சியில் எந்தவொரு பதவி வகித்தாலும் எவ்வாறான நிலையில் இருந்தாலும் புதிய அரசியல் கட்சியில் இணைந்துகொண்டால் அவர்கள் கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிடும்.

வேறும் கட்சியில் இணைந்து கொள்வதனால் கட்சி உறுப்புரிமையை இழக்கும் நபர்கள் மேன்முறையீடு செய்து கட்சி உறுப்புரிமையை மீளப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடையாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments
Loading...