Designed by Iniyas LTD
அவிசாவளை தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது..
கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது,
நேற்று பிற்பகல் சிறப்பு அதிரடிப்படையினர் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அவிசாவளையில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் பணியாற்றுவதாக விசாரணையின் போது தெரிவித்தனர். எனினும், அவர்கள் கூறியது பொய் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதோடு கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்களில், 9 பேர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் சாலிய அபேரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் மே 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட 9 சந்தேக நபர்களில் 7 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சிங்களவர், மற்றவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.