தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சங்கரிலாவில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரிகள்…

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் சங்கரிலாவில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் 25 கிலோகிராம் நிறையுடைய சி4 வெடிமருந்துகளை தற்கொலை தாக்குதலிற்கு பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


ஹோட்டலின் 3வது மாடியில் உணவகம், நடைபாதையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சங்கரில்லா ஹோட்டலின் 616ஆம் இலக்க அறையில் ஏப்ரல் 20ம் திகதி அறையில் தங்கியவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அறையை வாடகைக்கு பெறும்போது, அவர்கள் தெமட்டகொட பிரதேசத்தின் முகவரியொன்றை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தொட்டகொட மாகவில்ல மேம்பாலத்திற்கு அண்மையாக உள்ள வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சுற்றிவளைப்பை நடத்தி சோதனை நடத்த முற்பட்டபோது, துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...