Designed by Iniyas LTD
அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி 7ஆவது நாளாக தொடரும் போராட்டம்
அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்குழுவினர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் 7வது நாளை எட்டியுள்ளது. வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு இன்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
கோவை–திருப்பூர் மாவட்ட மக்களின் கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த அவினாசி–அத்திக்கடவு போராட்ட குழுவைச்சேர்ந்த 14 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7ம் நாளான இன்று வாயில் கறுப்புத் துணியை கட்டிக்கொண்டு அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சேவூர் பகுதியில், 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பெருமாநல்லூர் பகுதியில், 9 பேர் 2வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். போராட்டத்திற்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருவதால், உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.