Designed by Iniyas LTD
சென்னையில் 5 இடங்களில் நாளை (28-ந் தேதி) அம்மா திட்டம்
சென்னையில் 5 இடங்களில் நாளை (28-ந் தேதி) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ப. மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாவட்டத்தில் வருவாய்துறை சார்பில் நாளை வெள்ளிக்கிழமை 5 வட்டங்களில் ‘அம்மா திட்டம்’ சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாம்பலம் வட்டத்தில் மேற்கு மாம்பலம், பால குமார் குறுக்கு தெரு, மாநகராட்சி பல்நோக்கு திருமண மண்டபம். தண்டையார் பேட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம், பழைய வண்ணாரப்பேட்டை, பெரம்பூர்-மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகம், எம்.கே.பி நகர் 4-வது பிரதான சாலை. மயிலாப்பூர் – மாநகராட்சி சமுதாய நலக்கூடம், சி.பி ராமசாமி தெரு, ஆழ்வார்பேட்டை, எழும்பூர்- மாநகராட்சி சமூகநலக்கூடம், மேயர் சத்தியமூர்த்தி சாலை சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த முகாமில் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த தாலுகா எல்லைக்குள் வசிக்கும் பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் அறிந்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.